தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரெயில் சேவை
|தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாரம் 3 முறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை,
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாரம் 3 முறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06103) தாம்பரத்தில் இருந்து வருகிற 19-ந் தேதி, 21-ந் தேதி, 23-ந் தேதி, 26-ந் தேதி, 28-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்தடையும்.
மறு மார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06104) வருகிற 20-ந் தேதி, 22-ந் தேதி, 24-ந் தேதி, 27-ந் தேதி, 29-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.