புதுக்கோட்டை
புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
|ஆயுத பூஜையை முன் னிட்டு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
ஆயுத பூஜை
ஆயுதபூஜை நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொடர் விடுமுறையின் காரணமாக புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சென்னை சென்டிரல் - காரைக்குடி இடையே புதுக்கோட்டை வழியாக ஆயுத பூஜை சிறப்பு ரெயில் இயக்கப்படுவது தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியானது.
புதுக்கோட்டை வழியாக...
சென்னை சென்டிரலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்து 12.10-க்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக புதுக்கோட்டைக்கு நாளை (திங்கட்கிழமை) காலை 8.08 மணிக்கு வரும்.
தொடர்ந்து இந்த ரெயில் காரைக்குடி சந்திப்பிற்கு காலை 9.30 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து நாளை (வண்டி எண் 06040) இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு இரவு 10.08 மணிக்கு வந்து 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சென்று சேரும்.