< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை-பாட்னாவிற்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
|5 March 2023 6:53 AM IST
வட மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரெயிலை ரெயில்வே அறிவித்துள்ளது.
கோவை,
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகத்தில் தங்கி பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வட மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரெயிலை ரெயில்வே அறிவித்துள்ளது. கோவையில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவிற்கு இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி கோவையில் இருந்து இன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயிலானது 7 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பாட்னா சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பலூர், ஜோலார்பேட்டை மற்றும் விஜயவாடா ஆகிய ரெயில்நிலையங்கள் வழியாக பாட்னா சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.