< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
|22 Jan 2023 8:42 AM IST
தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்ககுவதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாம்பரம்-திருநெல்வேலி-எழும்பூர்: ரயில் எண்( 06021) தாம்பரம் -திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயிலானது ஜன 26 அன்று இரவு 9 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலி-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில் ஜன 27 அன்று மதியம் 1 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2. 30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர்,சாத்தூர்,கோவில்பட்டி,திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.