< Back
மாநில செய்திகள்
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
மாநில செய்திகள்

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
17 Aug 2024 11:33 PM IST

திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரெயிலானது புதன்கிழமை தோறும் மதியம் 3.25 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்,

முக்கிய பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (ரெயில் எண்-06115) இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரெயில் வருகிற 21, 28 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரெயிலானது புதன்கிழமை தோறும் மதியம் 3.25 மணிக்கு புறப்படும். பின்னர் மாலை 4.11 மணிக்கு குழித்துறை, 6.40 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வந்து வள்ளியூர் மற்றும் நெல்லை வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரெயில் (ரெயில் எண்-06116) மறு மார்க்கத்தில் 22, 29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறது.

மேலும் செய்திகள்