< Back
மாநில செய்திகள்
திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்டிரலில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரெயில்
மாநில செய்திகள்

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்டிரலில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
1 Jun 2024 8:39 PM IST

மங்களூரு சென்டிரல் - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் வரும் 4-ந்தேதி மங்களூரு சென்டிரல் - பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரலில் இருந்து வரும் 4-ந்தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.03244) புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் காலை 5.30 மணிக்கு பாட்னா சென்றடையும். இந்த ரெயிலானது மங்களூரு சென்டிரலில் இருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்