கோயம்புத்தூர்
பொள்ளாச்சியில் முதல் முறையாக காசிக்கு புனித யாத்திரை செல்ல சிறப்பு ரெயில்
|பொள்ளாச்சியில் முதல் முறையாக காசிக்கு புனித யாத்திரை செல்ல சிறப்பு ரெயில்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து காசிக்கு புனித யாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன் பொதுமக்கள் கொண்ட 300 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் பொள்ளாச்சியில் இருந்து காசிக்கு ரெயிலில் செல்ல 1,320 பேர் முன்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் மூலம் சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் நேற்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் ஒரு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி உள்பட 21 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. காசிக்கு செல்லும் பக்தர்களை வழியனுப்பி வைக்க உறவினர்களும் திரண்டதால் ரெயிலில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அலகாபாத், அயோத்தியா, புத்தகயா, வாரணாசி உள்ளிட்ட பகுதிகள் வழியாக யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. 9 நாட்கள் புனித யாத்திரையை முடித்துக் கொண்டு வருகிற 8-ந்தேதி மீண்டும் பொள்ளாச்சிக்கு ரெயில் வந்தடையும். காசி ஆன்மிக யாத்திரைக்கு கோவை, திண்டுக்கல், உடுமலை போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தும் உள்ளனர். மேலும் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆன்மிக பயணத்தில் கலந்துகொண்டு உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.