< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம் - செகந்திராபாத் இடையிலான சிறப்பு ரெயில் நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

ராமநாதபுரம் - செகந்திராபாத் இடையிலான சிறப்பு ரெயில் நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
30 April 2024 6:49 PM IST

சென்னை,

பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையிலான சிறப்பு ரெயில்கள் ஜுன் 28-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை (புதன்கிழமை), 8, 15, 22, 29 மற்றும் ஜீன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 07695) வியழக்கிழமை இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும். மறுமார்க்கமாக, ராமநாதபுரத்தில் இருந்து வருகிற 3, 10, 17, 24, 31 மற்றும் ஜீன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (07696) மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்