கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாம்பரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்
|மறுமார்க்கமாக அதேதேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06130) மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தாம்பரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது. தாம்பரத்தில் இருந்து நவம்பர் 26, 27-ந்தேதிகளில் காலை 8.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06129) அதேநாள் மதியம் 12.35 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கமாக அதேதேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06130) மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதேபோல நவம்பர் 26, 27-ந்தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06033) வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதேதேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06034) வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக காலை 9 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.