< Back
மாநில செய்திகள்
கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரெயில்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
21 April 2024 11:55 PM IST

தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் - காட்டாங்குளத்தூர் இடையே நாளை பயணிகள் சிறப்பு ரெயில் இன்று இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு காலை 4 மணி முதல் 9.30 மணி வரையிலும், காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு காலை 4.40 மணியில் இருந்து 10.05 மணி வரையிலும் 30 நிமிட இடைவெளியில் 9 பயணிகள் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்