< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|26 April 2023 1:09 AM IST
தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண் 06051) ஏப்ரல் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் வழியாக மறுநாள் காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.