< Back
மாநில செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்...!  தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு
மாநில செய்திகள்

நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்...! தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு

தினத்தந்தி
|
28 July 2023 10:48 PM IST

பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 30-ந்தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 30-ந்தேதி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06004) வரும் 30-ந்தேதி மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்