< Back
மாநில செய்திகள்
நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Jun 2023 9:16 PM IST

கூட்ட நெரிசலை குறைக்க நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே 3 மாதங்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030) ஜூலை 2-ந்தேதி, 9-ந்தேதி,16-ந்தேதி,23-ந்தேதி,30-ந்தேதி, ஆகஸ்டு 6-ந்தேதி, 13-ந்தேதி, 20-ந்தேதி,27-ந்தேதி, செப்டம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந்தேதிகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண்.06029)ஜூலை 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந்தேதி, 31-ந்தேதி, ஆகஸ்டு 7-ந்தேதி, 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந்தேதி, செப்டம்பம் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந்தேதி, 25-ந்தேதிகளில் 7.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை நெல்லையை வந்தடையும்.

ஈரோட்டிலிருந்து ஜூலை 7-ந்தேதி, 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந் தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.08312) அடுத்த நாள் இரவு 9.15 மணிக்கு ஒடிசா மாநிலம் சாம்பல்பூரை சென்றடையும்.

எர்ணாகுலத்தில் இருந்து ஜூலை 8-ந்தேதி, 15-ந்தேதி, 22-ந்தேதி, 29-ந்தேதிகளில் மதியம் 1.10 மணிக்கு வேளாங்கண்ணி புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06035) அடுத்த நாள் காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இதேபோல வேளாங்கண்ணியில் இருந்து ஜூலை 9-ந்தேதி, 16-ந்தேதி, 23-ந்தேதி, 30-ந்தேதிகளில் மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06036) அடுத்த நாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

மதுரையிலிருந்து ஜூலை 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் ஆகஸ்டு 4-ந்தேதி மதியம் 1.15 மணிக்கு குஜராத் மாநிலம் ஓகாவிற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்.09519) புறப்படும். இந்த ரெயில் 3 நாட்கள் கழித்து காலை 10.20 மணிக்கு ஓகா சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்