< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்
|18 April 2024 9:40 PM IST
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, நெல்லையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06008) மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
அதேபோல, திருச்சியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06032) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.