< Back
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - சென்னை இடையே சிறப்பு ரயில்
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - சென்னை இடையே சிறப்பு ரயில்

தினத்தந்தி
|
1 Nov 2023 9:32 PM IST

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் நாகர்கோவில் - தாம்பரம் இடையே (நவ.5,12,19,26) ஆகிய 4 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06012) மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தாம்பரம் - நாகர்கோவில் இடையே (நவ.6,13,20,27) ஆகிய 4 நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06011) அன்றைய தினம் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரெயிலானது திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நாளை(நவ.02) காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்