கோவை வழியாக கொச்சுவேலி-பீகார் இடையே சிறப்பு ரெயில்
|செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், வியாழக்கிழமைகளில் பீகார் மாநிலம் தனபூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
கோவை,
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வருகிற 19-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் காலை 4.15 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் கொச்சுவேலி-தனபூர் சிறப்பு ரெயில் (எண்:06183) வியாழக்கிழமைகளில் காலை 10 மணிக்கு பீகார் மாநிலம் தனபூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக வருகிற 22-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தனபூரில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் தனபூர் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் (எண் 06184) திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரெயிலானது, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, குடிவாடா, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, சாமல்கோட், சாம்பல்பூர், ரூர்கேலா, ராஞ்சி, கயா, பாட்னா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.