< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை சென்டிரல் - நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|19 July 2024 7:19 AM IST
சென்னை சென்டிரலில் இருந்து இன்று இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை சென்டிரல் - நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரலில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06083) மறுநாள் காலை 11.20 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.