< Back
மாநில செய்திகள்
சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரெயில்
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
30 March 2024 7:14 AM IST

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06550) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயில் கூடுதல் நிறுத்தமாக பெரம்பூரில் நின்று வரும்.

அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 1-ந் தேதி புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06049) அதே நாள் இரவு 8.25 மணிக்கு கோவை ரெயில் நிலையத்திற்கு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்