< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - நாளை நடைபெறுகிறது
|17 Nov 2023 7:53 AM IST
கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன.
சென்னை,
நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இந்நிலையில் 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கவர்னர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.