திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து
|சிறப்பு அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமாக போற்றப்படுகிறது இந்த தலம். இங்கு சிவபெருமானே மலையாக வீற்றிருந்து காட்சி தருவதாக ஐதீகம். எனவேதான், பக்தர்கள் இந்த மலையை வலம் வந்து (கிரிவலம்) சிவபெருமானை வணங்குகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது மகத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அண்ணாமலையார் கோவிலில் இதுவரை விவிஐபி, விஐபி அமர்வு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த சிறப்பு அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வருவதாலும், பக்தர்களின் நலன் கருதியும், விரைவாக தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் அமர்வு தரிசனம் இன்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிதுள்ளது.