< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டம்- டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
|29 Nov 2022 2:20 PM IST
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது .
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ .2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்