< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
|27 Sept 2023 1:13 AM IST
புரட்டாசி மாத ஏகாதசியையொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத ஏகாதசியையொட்டி சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.