< Back
மாநில செய்திகள்
கால பைரவருக்கு சிறப்பு பூஜை
நீலகிரி
மாநில செய்திகள்

கால பைரவருக்கு சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
8 Oct 2023 2:45 AM IST

தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தேய்பிறை அஷ்டமி நாள் கால பைரவருக்கு விசேஷமானதாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சக்தி முனிஸ்வரர் கோவில் வளாகத்தில் கால பைரவருக்கு மாதந்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி இரவு 7 மணிக்கு கால பைரவருக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்