< Back
மாநில செய்திகள்
பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
10 July 2022 11:19 PM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.


பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை

இறை தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாமியர்கள பக்ரீத் பண்டிகையை தியாக திருநாளாக கொண்டாடி வருகின்றனர். மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை ஜமாத் தலைவர் சபீர்தீன் தலைமையில் நடந்தது. அப்துல் காதர் தொழுகையை நடத்தி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்