< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
|29 Sept 2023 12:50 AM IST
பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இறைத்தூதர் முகமது நபியின் பிறந்தநாள் மிலாது நபி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மிலாது நபி திருநாளையொட்டி வேலாயுதம்பாளையம் ஜன்னத்துல் பீர் தென்ஸ் பள்ளி வாசலில் முஸ்லிம்கள் சிறப்பு ெதாழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதேபோல் புகழூர் மதர்ஸா, டி.என்.பி.எல். குடியிருப்பு, கட்டிப்பாளையம், தோட்டக்குறிச்சி ஆகிய பள்ளி வாசல்களில் மிலாது நபியையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.