< Back
மாநில செய்திகள்
கரூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
23 April 2023 12:05 AM IST

கரூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ரம்ஜான் பண்டிகை

ரமலான் மாதத்தில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி கரூர் ராயனூர் மைதானத்தில் கரூர் ஐக்கிய ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், ஈத்கா பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது நோன்பின் மகத்துவம் குறித்தும், ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாவின் பேரருளை பெறுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கட்டித் தழுவி...

வானில் பிறையை பார்த்து நோன்பு நோற்க வேண்டும். பிறையை பார்த்து நோன்பை முடித்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நபிகள் நாயகம் கூறிய போதனைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. தொழுகை முடிந்ததும் அன்பின் வெளிப்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதேபோல் கரூர் திருமாநிலையூரில் உள்ள சாய் கார்டனில் கரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் கரூரில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் உள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். இதேபோன்று அரவக்குறிச்சியில் உள்ள ஈத்கா மைதானத்திலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

குளித்தலை

குளித்தலை வைகநல்லூர் ஜீம்மா பள்ளிவாசல் வளாகத்தில் ரம்ஜான் பண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதைெயாட்டி பள்ளிவாசல் முன்பு பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டு இருந்தது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் ஜன்னத்துல்பீர் தென்ஸ் பள்ளி வாசலில் சிறப்பு தொ தொழுகை நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.

இதேபோல் புகழூர், கட்டிப்பாளையம், தோட்டக்குறிச்சி பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

மேலும் செய்திகள்