< Back
மாநில செய்திகள்
நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
10 July 2022 9:51 PM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாகூர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த பண்டிகையன்று ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி கொடுப்பது வழக்கம்.

சிறப்பு தொழுகை

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். சிறுவர். சிறுமிகளும் புத்தாடை அணிந்து வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.

கீழ்வேளூர்

இதேபோல நாகூர் மதார் மரைக்காயர் பள்ளிவாசல், செய்யது பள்ளிவாசல், ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல், காதிரிய்யா மதராஸா பள்ளிவாசல், திவான்ஷா பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

கீழ்வேளூர், கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி, இரட்டைமதகடி, இருக்கை, இறையான்குடி, ஆழியூர் சிக்கல் பொரவச்சேரி, சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

மேலும் செய்திகள்