< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறையில், ஒரே இடத்தில் 2 ஆயிரம் போ் சிறப்பு தொழுகை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறையில், ஒரே இடத்தில் 2 ஆயிரம் போ் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
23 April 2023 12:15 AM IST

ரம்ஜான் பண்டிகையையொட்டி மயிலாடுதுறையில், ஒரே இடத்தில் 2 ஆயிரம் போ் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை;

ரம்ஜான் பண்டிகையையொட்டி மயிலாடுதுறையில், ஒரே இடத்தில் 2 ஆயிரம் போ் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

ரம்ஜான் பண்டிகை

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரம்ஜான் மாதம் இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். ரம்ஜான் பண்டிகை மயிலாடுதுறை மாவட்டத்தில் இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அப்துல் கரீம் ஹஜ்ரத் நினைவரங்கத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அரபிக் கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் பாசில் பார்கவி தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உலகில் அன்பும், அறமும், மனிதநேயமும், தழைத்தோங்க வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

வாழ்த்து

பின்னர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான மணிசங்கர் ஐயர், ராஜகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மயிலாடுதுறையில் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்ரம்ஜான் சிறப்பு தொழுகை தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகள், முதியோர்கள் கலந்து கொண்டு தங்களின் ரம்ஜான் தொழுகையை நபிகள் நாயகம் காட்டிய வழியில் நிறைவேற்றினர்.

பொறையாறு

பொறையாறு அருகே ஆயப்பாடி ஜும்ஆ பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பிறகு சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டனர். இதைப்போல தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், வேலம்புதுக்குடி, திருவிளையாட்டம், வடகரை, அரங்ககுடி, திருச்சம்பள்ளி, பூந்தாழை, ஆக்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மேலும் செய்திகள்