< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
|4 Oct 2023 12:30 AM IST
கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, 11 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கூடலூர் அருகே சந்தன மலை முருகன் கோவிலில் காலை முதல் மாலை 6 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.