< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
|26 Sept 2023 1:30 AM IST
கொண்டேகவுண்டன்பாளையத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நெகமம்
நெகமத்தை அடுத்த காட்டம்பட்டிபுதூரில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் மற்றும் அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. இதில் காட்டம்பட்டிபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று கொண்டேகவுண்டன்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் மண்டல பூஜை 7-ம் நாள் வழிபாடு நடந்தது. இதில் திருவோண நட்சத்திரத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.