< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
|2 Oct 2023 6:45 PM GMT
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சக்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவில் வன்னி விநாயகர், செல்வவிநாயகர், வாசவி கோவில் வளாகத்தில் உள்ள மஹோற்கடகணபதி, பொய்க்குணம் சாலையில் உள்ள நவசக்தி விநாயகர் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.