< Back
மாநில செய்திகள்
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
நீலகிரி
மாநில செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
1 Oct 2023 1:30 AM IST

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புரட்டாசி சனிக்கிழமை

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்துக்கு தனிச்சிறப்பு உள்ளது. இது பெருமாள், துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் மாதமாக கருதப்படுகிறது. அதுவும், புரட்டாசி மாதத்தில் பெருமாள் அவதரித்ததாக கூறப்படுவதால், அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், அவரது அருள் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையைெயாட்டி நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தேரோட்டம்

ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. மழை பெய்ததால் பக்தர்கள் குடைகளுடன் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு அலங்கார மற்றும் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. இதேபோன்று கோத்தகிரி குன்னூர், கூடலூர், மஞ்சூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்