< Back
மாநில செய்திகள்
நெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்

தினத்தந்தி
|
7 July 2023 1:28 AM IST

நெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் 8-ந் தேதி நடக்கிறது.

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு விசாரிப்பதற்காக சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சா்பில் நாளை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் காலை 10 மணிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் சிறப்பு நீதிமன்றம் நடைபெறுகிறது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்