< Back
மாநில செய்திகள்
காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு
மாநில செய்திகள்

காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு

தினத்தந்தி
|
8 Jun 2023 7:46 AM IST

காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,


தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் ஆணையர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதைக்கொண்டு பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவியுடன் சிறப்பு சோதனை பணிகளை மேற்கொள்ள நகரங்களில் உள்ள காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல் காணாமல்போன குழந்தைகளை விரைவாக கண்டறிந்து, அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் தனித்தனி சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்.

அதைத்தொடர்ந்து, முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையானது வரும் ஜூன் 12-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையை நிறைவேற்றும் காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்