< Back
மாநில செய்திகள்
வரும் சனிக்கிழமை தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம்
மாநில செய்திகள்

வரும் சனிக்கிழமை தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம்

தினத்தந்தி
|
16 Nov 2023 12:35 PM IST

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

சென்னை,

தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் வருகிற சனிக்கிழமை (18-ம் தேதி) தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிறப்புக் கூட்டத்தில், கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை வருகிற 18-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் கூட்டியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்