< Back
மாநில செய்திகள்
காரியாபட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்
விருதுநகர்
மாநில செய்திகள்

காரியாபட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
17 Oct 2023 1:50 AM IST

காரியாபட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

காரியாபட்டி தாலுகா முடுக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சொக்கனேந்தல் கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் காசநோய் துறை சார்பில் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வேன் மூலம் சிகிச்சை மற்றும் பொது மருத்துவம், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் சளி பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, மழை காலங்களில் மக்கள் சுகாதாரமாக இருக்க ஆலோசனைகளை டாக்டர் விக்னேஷ், காசநோய் பிரிவு மேற்பார்வையாளர்கள் தங்ககுமார், அக்பர் அலி பாதுக்ஷா, அரவிந்த் ஆகியோர் வழங்கினர். இதில் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்