< Back
மாநில செய்திகள்
திருவாலங்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவாலங்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
25 Jun 2023 7:50 PM IST

திருவாலங்காட்டில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகமெங்கும் 100 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவுசெய்யும் முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். முகாமில் 600-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு சிகிச்சைகள்அளிக்கப்பட்டு சுயவிவரம் கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன், இணை இயக்குநர் (மருத்துவம்) சேகர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜவஹர்லால், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் திலகவதி, மருத்துவர்கள், நர்சுகள்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்