< Back
மாநில செய்திகள்
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம்

தினத்தந்தி
|
23 Feb 2023 6:41 PM GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.


தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் 3 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

கண்-பல் பரிசோதனை

சிறப்பு மருத்துவ முகாமில் சிறுநீரக பாதிப்பு தொடர்பான நவீன சிகிச்சை, ரத்த வகை கண்டறிதல், மற்றும் கண், பல் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் தகுந்த ஆலோசகர்களால் மறுவாழ்வு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் 40 பேர் பயனடைந்தனர். படுக்கை புண்ணால் பாதிக்கப்பட்ட 2 பேர் உடனடியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேலும், 3 பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை- கும்பகோணம்

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இதே போல, இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மார்ச் 9-ந் தேதியும், 3-ம் கட்டமாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மார்ச் 23-ந் தேதியும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் நமச்சிவாயம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்திரிஸ், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன், பொருளாளர் முத்துக்குமார், தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் மாநில தலைவர் கருணாகரன். தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்