< Back
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
தேனி
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
26 Sept 2023 5:30 AM IST

கடமலைக்குண்டு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

கடமலைக்குண்டு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம் தலைமை தாங்கி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு காய்ச்சல், சளி, கை, கால் மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் துணைத்தலைவர் பிரியா தனபாலன், ஊராட்சி செயலர் சின்னச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்