< Back
மாநில செய்திகள்
அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
15 Oct 2022 4:41 PM GMT

திருவண்ணாமலையில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

இதில் பொது மருத்துவம், குடல் நோய், மகப்பேறு பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் மருத்துவம், பல் மருத்துவம், தோல் நோய், இருதய நோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு சிறப்பு டாக்டர்களை கொண்டு நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல்சிகிச்சை தேவைப்படுவோர் உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மேல்சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமால், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செல்வக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அருணாசலம் முகாமை தொடங்கி வைத்தார்.

கீழ்பென்னாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவஅலுவலர் சரவணன் தலைமையில், டாக்டர்கள் ராஜலட்சுமி, பூஜா, ஜெயசுதா, பகுத்தறிவு மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ்பாபு, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

பெரணமல்லூர்

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பெரணமல்லூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் லட்சுமி லலிதாவேலன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதில் டாக்டர்கள் அருள்குமார், பன்னீர்செல்வம், நிரஞ்சன் வினிதா, சுஜீ மற்றும் செவிலியர்கள், களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 271 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், துப்புரவு பணியாளர்கள், பம்பு ஆபரேட்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெரணமலூர் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் ரவி நன்றி கூறினார்.

இதேபோல் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அரசு அலுவலர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

ஆரணி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ முகாம் நடந்தது.

ஒன்றியக் குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

மலையாம்பட்டு, தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவ குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் ரத்த அழுத்தம், ரத்த வகை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து, சிகிச்சையளிக்கப்பட்டது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.

மேலும் செய்திகள்