< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
|11 March 2023 12:16 AM IST
காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தமிழகத்தில் தற்போது வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நேற்று மொத்தம் 1,000 இடங்களில் நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களிலும் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 36 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 81 இடங்களிலும் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தன. முகாம்களில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். மேல்சிகிச்சை தேவைப்படுவோரை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர்.