< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பெண் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
|6 March 2023 12:41 AM IST
பாளையங்கோட்டையில் பெண் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பெண் போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நெல்லை கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். தலைமையிடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா வாழ்த்தி பேசினார்.
முகாமில் பெண் போலீசாருக்கு எடை மற்றும் உயரம், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மகளிர் நல டாக்டர் தீபாஞ்சலி பானர்ஜி தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இதில் ஏராளமான பெண் போலீசார் பங்கேற்றனர்.