திண்டுக்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
|முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டன
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மருத்துவ முகாம் நடக்கிறது.
இதில் எலும்பு முறிவு, காது-மூக்கு மற்றும் தொண்டை, மனநலம், கண் ஆகியவற்றுக்கு தனித்தனியாக அரசு டாக்டர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர். இதையடுத்து டாக்டர்கள் அளிக்கும் மருத்துவ சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே பழனி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, 6 புகைப்படங்களுடன் வந்து முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.