கரூர்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
|மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உள்ளிட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.