< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
|17 Aug 2023 12:03 AM IST
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டஅரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள இருப்பதால் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதிதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் நபர்ள் அனைவரும் முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.