< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
20 Aug 2023 4:04 PM IST

காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சீபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் நெறிவழி காட்டும் மையம், முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஆவின், தாட்கோ, மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் ஆதார் அட்டை அரங்குகள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு திட்ட விளக்கவுரை வழங்கப்பட்டது.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த முகாமில் மொத்தம் 139 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும், 12 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டையும் வழங்கப்பட்டு, 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஆதார் அட்டையும் பதிவு செய்யப்பட்டது.

இந்த முகாமில் உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்