< Back
மாநில செய்திகள்
6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
25 May 2022 6:15 PM GMT

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஒரு மாதம் நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் தேசிய குழந்தை நலத்திட்டம் இணைந்து நடத்திய 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை உறுதி செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் 6 வட்டாரங்களில் மிதமான மற்றும் கடுமையான எடை குறைவு உள்ள 18,682 குழந்தைகள் உள்ளனர். மேலும் இம்மருத்துவ முகாம் ஒரு மாதம் நடைபெற உள்ளதுடன், முதல் 3 வாரங்களில் தொடர் பரிசோதனைகளும், 4-வது வாரத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு பரிசோதனையும் செய்யப்பட உள்ளது. ஒரு வட்டாரத்திற்கு 20 வீதம் அங்கன்வாடி மையத்திற்கு டாக்டர் சென்று குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். எனவே, இம்முகாமை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்