< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
சிறப்பு மருத்துவ முகாம்
|11 Sept 2023 1:00 AM IST
நெல்லையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெல்லை ஜி3 ஸ்கேன்ஸ் லேப்ஸ் கேபி கேஸ்ட்ரோ - சென்டர் நெல்லை கேன்சர் கேர் இணைந்து நேற்று நெல்லை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் முகாமை நடத்தியது. இந்த முகாமை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
முகாமில் பா.ஜ.க. இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் நயினார் பாலாஜி, டாக்டர்கள் காயத்ரி, பாண்டி செல்வி மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஸ்வஸ்தியா மனநல மையம் சார்பாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.