< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
சிறப்பு மருத்துவ முகாம்
|27 Aug 2023 1:50 AM IST
தேவிபட்டினத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிவகிரி:
தேவிபட்டணம் ஊராட்சி போஸ் இந்து ஆரம்பப்பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர் சதன் திருமலைக்குமார், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட துணை செயலாளர் மனோகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.