< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை நகரில் சிறப்பு பராமரிப்பு பணிகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை நகரில் சிறப்பு பராமரிப்பு பணிகள்

தினத்தந்தி
|
25 April 2023 5:53 PM IST

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 27, 28-ந் தேதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.


சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பாவாஜி நகர், திருவண்ணாமலை நகரம் -2க்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 27-ந் தேதியும் (வியாழக்கிழமை), நகரம் -1 மற்றும் அண்ணா நகருக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 28-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

இதனால் 27-ந் தேதி திருமஞ்சன கோபுர தெரு, குமரக் கோவில் தெரு, கன்னிக்கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, திருவூடல் தெரு, பெரிய கடை வீதி, போத்தராஜா கோவில் தெரு, அசலி அம்மன் கோவில் தெரு, வாணித்தெரு, பைபாஸ் சாலை, துராபலி தெரு, ராமலிங்கனார் தெரு, சன்னதி தெரு, கட்டபொம்மன் தெரு, தண்டராம்பட்டு சாலை ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

28-ந் தேதி முத்து மாரியம்மன் நகர், ஹைடெக் நகர், திருகோவிலூர் சாலை, தென்மாத்தூர், தண்டராம்பட்டு சாலை, முருகர் கோவில் தெரு, அண்ணா நகர் முழுவதும் ஆகிய பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்